எம்ஜிஆருக்கு நிகராக பார்க்கப்படும் ஒரே ஹீரோ இந்த நடிகரா??

#Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
3 years ago
எம்ஜிஆருக்கு நிகராக பார்க்கப்படும் ஒரே ஹீரோ இந்த நடிகரா??

மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமாவில் ஒரு மிகப்பெரிய சரித்திரத்தையே உருவாக்கியவர். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்று கிட்டத்தட்ட ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர். அவருடைய நற்குணங்கள் என்பதை தாண்டி எம்ஜிஆரை நினைக்கும் போது முதலில் நினைவுக்கு வருவது அவருடைய அழகான முகம் தான்.

சினிமாவில் அடுத்த சிவாஜி, அடுத்த ரஜினி என்று கூட கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவர்தான் அடுத்த எம்ஜிஆர் என்று யாரும் இதுவரை சொன்னதும் இல்லை. தமிழக ரசிகர்களும் அதை ஏற்றுக் கொண்டதும் இல்லை. அப்படி இருக்க பழம்பெரும் நடிகர் சோ ராமசாமி ஒரு நடிகரை எம்ஜிஆருக்கு நிகர் என்று கனித்திருக்கிறார்.

பழம்பெரும் நடிகர் சோ ராமசாமி ஒரு நடிகராக மட்டுமல்லாமல், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவருக்கு ரொம்பவும் நெருக்கமானவரும் கூட. அதே நேரம் அரசியல் வல்லுநரும் கூட. இவர் அந்த காலத்திலேயே யாருக்கும் பயப்படாத ஒருவர். அப்படிப்பட்ட இவர் ஒரு நடிகரை எம்ஜிஆருக்கு நிகர் என்று சொல்லி இருக்கிறார்.

சோ சொன்ன அந்த நடிகர் அஜித் குமார் தான். ஒரு முறை நடிகர் மயில்சாமி நடிகர் அஜித்திடம் உங்களை எம்ஜிஆர் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னபோது அஜித் அதை நம்பவில்லையாம் . ஆனால் அவர் சொன்ன இரண்டு மாதங்களிலேயே ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் எம்ஜிஆருக்கு நிகரானவர் நடிகர் அஜித் என்று கூறி இருக்கிறார்.

நடிகர் அஜித் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்தவர். தன்னுடைய சொந்த உழைப்பால் இன்று உச்சம் தொட்டிருக்கிறார். தன் வளர்ச்சிக்காக எந்த ஒரு விளம்பரத்தையோ ஆடம்பரத்தையோ இவர் விரும்பியதில்லை. ரசிகர் மன்றத்தை இவர் கலைத்த போதும் இவருக்கான ரசிகர்கள் கோடிக்கணக்கில் இன்றும் இருக்கிறார்கள்.

அஜித் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த காலத்திலேயே எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அவரை ரொம்ப பிடித்துப் போனதாம். அதேபோல்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் அஜித்தை ரொம்ப பிடிக்கும் என்று பல பேட்டிகளில் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி இருக்கிறார்கள். அதேபோன்று நடிகர் சோ ராமசாமிக்கும் அஜித்தை ரொம்ப பிடிக்கும் என்று அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4