சீனாவின் திபெத்தில் சுரங்கப்பாதை பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

#China #Blizzard #Death
Prasu
3 years ago
சீனாவின் திபெத்தில் சுரங்கப்பாதை பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. 

நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. 

மேலும் இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல்கள் புதன்கிழமை இரவில் தெரிய வந்தது. 

சம்பவ இடத்துக்கு 131 மீட்பு படையினரும், 28 அவசரகால வாகனங்களும் விரைந்துள்ளனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4