பிள்ளையார் கறுப்பு வெள்ளையாக மாறுவதுண்டா? வாசித்துப்பாருங்கள்...! பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
#பிள்ளையார்
#கணபதி
#விநாயகர்
#ஏகதந்தன்
#ஐங்கரன்
#spiritual
#God
#Pillaiyar
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- கோயம்புத்துாரில் உள்ள காரண விநாயகர் அந்தக் கோவிலில் எந்தக்காரணமும் இன்றி அமர்ந்திருந்தால் அப்பெயர் பெற்றார். இங்கு அவருக்கருகில் நந்தி, முருகன் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் வீற்றிருப்பர்.
- நம்பியாண்டர் நம்பியின் பாடலைக்கேட்ட விநாயகர் மன்னன் கொடுத்த நைவேத்தியத்தை அனைவர் முன்னிலும் உட்கொண்ட கோவில் இதுவாகும். இங்கு பிள்ளையார் சிலை உளியால் பொள்ளாது காணப்படுவதால் பொள்ளப்பிள்ளையார் என அழைக்கப்பட்டார்.
- துாத்துக்குடியில் விநாயகருக்கென ஒரு தனிக்கோவில் உண்டு, அங்கு கொடிமரம் உள்ளது. கி.மு. 4ம் நுாற்றாண்டு மன்னன் வல்லபன் பெரிய யாகமொன்றை செய்வதற்கு 1008 அந்தணர்களில் ஒருவராக விநாயகர் வந்த படியால் அங்கு அவர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார்.
- திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலி்ல் பிள்ளையாரை வணங்கிவிட்டு கிரிவலம் வந்து ஏழாவதாக உள்ள பி்ள்ளையாரை வணங்குவதால் இந்தப்பிள்ளையாருக்கு ஏழைப்பிள்ளையார் என்று அழைப்பர்.
- கறுப்பு வெள்ளை விநாயகர் கேரளபுரத்தில் ஒரு அரசமரத்தடியில் இருக்கார். இவரை மன்னன் வீரகேரளவர்மா, ராமநாதபுர அக்னி தீர்த்தக்கடல் கல்லை கொண்டு விநாயகர் சிலை செதுக்கி பின்னர் அது வளர்ந்து இவ்வாறு கறுப்பு வெள்ளையாக குறிப்பிட்ட காலங்களில் திகழ்வதால் இப்பெயர் வந்ததது. தற்போது இது ஒரு அபுர்வக்கல் என விஞ்ஞானிகள் அதாவது சந்திர காந்தம் என இதனை அழைக்கிறார்கள்.