அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை - சிக்கிய இரகசிய ஆவணங்கள்!

#worship #Tamilnews #America #United_States
Nila
1 year ago
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை - சிக்கிய  இரகசிய ஆவணங்கள்!

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் வீடு மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் அரசின் ரகசிய ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 2-ந்தேதி, டிசம்பர் 20-ந்தேதி மற்றும் ஜனவரி 12-ந்தேதிகளில் நடந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

அந்த ஆவணங்கள் ஜோபைடன் 2009 முதல் 2017-ம் ஆண்டு வரை துணை அதிபராக பதவி வகித்த கால கட்டத்தை சேர்ந்தவை ஆகும். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அரசின் ரகசிய ஆவணங்கள் ஜோபைடன் வீட்டில் இருந்தது தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க அட்டர்ரனி ஜெனரல் மெரிக் ஹார் லெண்ட் உத்தரவிட்டார். இதற்கான விசாரணை குழு அமைக்கப்பட்டது. 

 இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை டெலாவேரின் வில்மிங்டனில் உள்ள ஜோ பைடன் வீட்டில் நடந்தது. சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இதில் சில ஆவணங்கள் ஜோபைடன் செனட்டராக இருந்த காலத்திலும், மற்றவை துணை அதிபராக இருந்த காலத்திலும் தயாரிக்கப்பட்டவை ஆகும். இது தொடர்பாக ஜோபைடனின் வக்கீல் பாப் பாயர் கூறும்போது, "ஜோ பைடன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 

கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் சுற்றப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை எடுத்து சென்றனர். தனது வீட்டில் நீதித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த அதிபர் ஜோபைடன் சம்மதம் தெரிவித்தார்" என்றார். அதிபர் ஜோபைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் நீதித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!