மனைவி லண்டனில் இருக்க மீண்டும் த்ரிஷா உடன் ஜோடி சேர்ந்த விஜய் -பார்ட்டி வைத்து கொண்டாடிய திரிஷா..

#Cinema #TamilCinema #Vijay #Trisha #London #வாரிசு
Nila
3 years ago
மனைவி லண்டனில் இருக்க  மீண்டும் த்ரிஷா உடன்  ஜோடி சேர்ந்த விஜய் -பார்ட்டி வைத்து கொண்டாடிய திரிஷா..

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது, பொதுவாக விஜய் நடிக்கும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் மனைவி மற்றும் அவர் தாய் தந்தையார் என குடும்பத்துடன் அனைவரும் கலந்து கொள்வார்கள். ஆனால் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜயின் தாய் தந்தை கலந்து கொண்ட நிலையில் அவருடைய மனைவி கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் விஜய் மனைவி சமீபகாலமாக லண்டனில் இருந்து வருவதாகவும், மேலும் விஜய் மீது உள்ள சில கருத்து வேறுபாடு காரணமாக தான் அவர் வாரிசு படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் அரசல் புரசலாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் விஜய் வாரிசு படத்தை முடித்துவிட்டு தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய படத்தில் கமிட்டாகி அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

விஜய் நடிக்கும் இந்த புதிய படத்தில் நடிகை திரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பொன்னியின்
செல்வன் படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ- என்ட்ரி கொடுத்துள்ள திரிஷா, நடிகர் விஜயின் சிபாரிசின் பேரிலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் மற்றும் திரிஷா ஜோடி தொடர்ந்து பல படங்கள் நடித்த போது இருவரையும் தொடர்பு படுத்தி பல கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளது மட்டுமின்றி, விஜய் குடியிருக்கும் நீலாங்கரை வீட்டின் அருகிலே சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பில் நடிகை திரிஷா ஒரு புதிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே திரிஷாவிற்கு வீடு இருக்கும் நிலையில், விஜய் வீட்டின் அருகில் தற்பொழுது வீடு வாங்கி உள்ளது பல கிசு கிசுக்களை கிளப்பியுள்ளது.

மேலும் விஜய் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி உள்ள இந்த சூழலில் படத்தின் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இனி, விஜய் வீட்டின் அருகில் புதியதாக வாங்கியுள்ள இந்த வீட்டில் தான் திரிஷா தங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் தோழிகளை அழைத்து பார்ட்டி கொடுத்துள்ள திரிஷா தான் தற்பொழுது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதற்காக தான் இந்த பார்ட்டி என தோழிகளிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் திரிஷா.

இந்த நிலையில் விஜய் மனைவி லண்டனில் இருக்க, த்ரிஷா உடன் புதிய படத்தில் ஜோடி சேர்ந்த விஜய் வீட்டின் அருகிலேயே திரிஷா புதிய வீடு வாங்கியது சினிமா வட்டத்தில் பல்வேறு கிசுகிசு செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4