நடிகர் பிரேம்ஜி அமரன் பாடகி வினைதாவை ரகசிய திருமணம் செய்து கொண்டாரா ? பாடகியின் பதிவால் பரபரப்பு!

#Cinema #TamilCinema #Lanka4 #Tamilnews #Marriage
Nila
3 years ago
நடிகர் பிரேம்ஜி அமரன் பாடகி  வினைதாவை ரகசிய திருமணம் செய்து கொண்டாரா ? பாடகியின் பதிவால் பரபரப்பு!

’என் புருஷனோட நான் சேர்ந்து விட்டேன்’ என பிரபல பாடகி வினைதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனின் இரண்டாவது மகனான பிரேம்ஜி 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் பிரபல பாடகி வினைதா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது. இது குறித்து இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்த புகைப்படங்கள் வைரல் ஆகின.

இந்த நிலையில் பாடகி வினைதா தனது இன்ஸ்டாகிராமில், பிரேம்ஜியை கட்டிப்பிடித்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’என் புருஷன் உடன் மீண்டும் சேர்ந்து விட்டேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து இருவருக்கும் ரகசிய திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இனிமேல் திருமணம் ஆகப்போகிறதா? என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

எது எப்படியோ பிரேம்ஜி திருமணமாகி வாழ்க்கையில் செட்டில் ஆனால் சரிதான் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இருவரும் சேர்ந்து விரைவில் ரசிகர்களுக்கு விளக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4