உலகமெங்கிலும் உள்ள ஐந்து பில்லியன் மக்களின் ஆரோக்கியம் ஆபத்தில்- உலக சுகாதார அமைப்பு கவலை!

#world_news #World_Health_Organization #Lanka4 #Tamilnews #Food #Canada #America
Nila
1 year ago
உலகமெங்கிலும் உள்ள ஐந்து பில்லியன்  மக்களின் ஆரோக்கியம் ஆபத்தில்- உலக சுகாதார அமைப்பு கவலை!

உலகமெங்கிலும் ஐந்து பில்லியன் மக்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கொழுப்பு கலந்த உணவை எடுத்துக்கொள்வதன் காரணமாக இதய நோய் மற்றும் இறப்பின் விளிம்பில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கொழுப்பை மொத்தமாக நீக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று உலக சுகாதார அமைப்பால் 2022ல் தயாரிக்கப்பட்டது.  தற்போது வெளியாகியுள்ளது.

இதில், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கொழுப்பை மொத்தமாக தடை செய்ய அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வேதியியலாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த பொருளானது, வெண்ணெய் போன்ற விலங்கு கொழுப்புகளுக்கு மலிவான மாற்றாக விரைவாக பிரபலமடைந்தது.

1990 காலகட்டம் வரையில் குறித்த கொழுப்பானது ஆரோக்கியமானதாகவே பரவலாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் உண்மையில் உயிரை கொல்லும் ஆபத்தான ரசாயனம் என்றே தற்போதைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எந்த காரணத்தைக்கொண்டும் உணவில் அவை சேர்த்துக்கொள்ளவும் கூடாது என எச்சரித்துள்ளனர். டிரான்ஸ் கொழுப்பு உட்கொள்ளல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கரோனரி இதய நோயால் உலக அளவில் 500,000 அகால மரணங்கள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

கனடா உட்பட 43 நாடுகள் தற்போது இந்த ஆபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக பட்டியலிட்டுள்ளது. தாய்லாந்து, இந்தியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட இந்த 43 நாடுகளில் மொத்தம் 2.8 பில்லியன் மக்கள் உள்ளனர்.

2018 செப்டம்பர் மாதத்தில் இருந்தே உணவு வகைகளில் அதிகபடியான தொழிற்சாலை தயாரிப்பு கொழுப்புகளை பயன்படுத்த கனடா தடை விதித்துள்ளது. ஆனால் 2004ல் இருந்தே, அமெரிக்காவும் டென்மார்க்கும் தடை விதித்துள்ளதுடன் உரிய கட்டுப்பாடுகளும் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!