இதுவரை இல்லாத அளவு -53 டிகிரி செல்சியஸ் குளிரில் உறைந்த சீன நகரம்

#world_news #China #Blizzard #Lanka4 #Tamilnews #லங்கா4
Prasu
1 year ago
இதுவரை இல்லாத அளவு -53 டிகிரி செல்சியஸ் குளிரில் உறைந்த சீன நகரம்

சீனாவின் வடக்கே உள்ள Mohe நகரம் -53 டிகிரி செல்சியஸ் குளிரில் உறைந்துள்ளது.

அங்கு தட்பநிலை இதுவரை இல்லாத அளவு குறைந்திருக்கிறது.

நேற்று முன்தினம் அங்கு தட்பநிலை பூஜ்யத்துக்குக் கீழ் 53 டிகிரி செல்சியஸாக (degrees Celsius) பதிவாகியது.

இதற்கு முன்பு அங்கு 1969ஆம் ஆண்டு தட்பநிலை ஆகக் குறைவாகப் பூஜ்யத்துக்குக் கீழ்  52.3 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

ஆனால் சீனாவில் பதிவாகிய ஆகக் குளிரான தட்பநிலை அது கிடையாது. 2009ஆம் ஆண்டு கென்ஹே (Genhe) நகரில் தட்பநிலை பூஜ்யத்துக்குக் கீழ் 58 டிகிரி செல்சியஸாக இருந்தது.

மோஹே நகர் ரஷ்யாவுடனான எல்லைக்கு அருகே உள்ளது. அங்குக் குளிர்காலம் வழக்கமாக 8 மாதங்கள் நீடிக்கும். அதுவே சீனாவின் ஆகக் குளிரான நகர் என்று கருதப்படுகிறது.

பனியை அனுபவிப்பதற்காகவே ஆண்டு முழுவதும் அங்குச் சுற்றுப்பயணிகள் செல்வது உண்டு.

இந்தக் காலக்கட்டத்தில் அங்கு தட்பநிலை சராசரியாகப் பூஜ்யத்துக்குக் கீழ் 15 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

குளிர் கடுமையாக இருப்பதால் மோஹே நகரில் நிலக்கரிகளின் பயன்பாடு மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!