இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி குறித்து சந்தேகம் !!

#IMF #SriLanka #Lanka4
Prabha Praneetha
3 years ago
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி குறித்து சந்தேகம் !!

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா உதவியை வழங்க முன்வந்தபோதும், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று  செய்திகள்  தெரிவிக்கின்றன 

முன்னதாக இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வை தரும் வகையில்இந்தியா சர்வதேச நாணய நீதியத்திற்கு கடிதம் எழுதியது.

அதில், இலங்கைக்கு நிதியுதவி மற்றும் கடன் நிவாரணத்துடன் ஆதரவளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கைக்கு அதன் கடனுக்காக இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது..

இந்த கடிதம் ஜனவரி 19 ஆம் திகதி இலங்கையின் நிதியமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் சீனாவின் இந்த நிலைப்பாடு, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலை உடனடியாகப் பெறுவதற்கு இலங்கைக்கு போதுமானதாக இருக்காது தொடர்புடைய தரப்புக்களை தரப்புக்களை கோடிட்டு செய்தி தளமொன்று  தெரிவித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4