அமெரிக்க நீதிமன்றத்தில் உலகின் முதல் முறையாக மனிதனுக்காக வாதாட போகும் ரோபோ வழக்கறிஞர்

#America #technology #Robot #Law
Prasu
1 year ago
அமெரிக்க நீதிமன்றத்தில் உலகின் முதல் முறையாக மனிதனுக்காக வாதாட போகும் ரோபோ வழக்கறிஞர்

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜோஸ்வா பிரவுடர் (26). இவர் டுநாட்பே (DoNotPay) என்ற சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் செயல்படும் இந்தநிறுவனம், உலகில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம்செயல்படும் ரோபோ வழக்கறிஞரை உருவாக்கி உள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் பெப்ரவரி மாதம் நடைபெறும் முக்கியவழக்கு விசாரணையில் ரோபோவழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரருக்காக வாதாட உள்ளது. எந்த நீதிமன்றம், யாருடைய வழக்கு, எந்ததிகதியில் விசாரணை நடைபெறுகிறது என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பெரும்பாலான அமெரிக்க நீதிமன்றங்களில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு அனுமதி கிடையாது. குறிப்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வகையான மின்னணுசாதனங்களுக்கும் தடை விதிக்கப் பட்டிருக்கிறது.

இந்த சூழலில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் ரோபோ வழக்கறிஞர் எவ்வாறு அனுமதிக்கப்படும் என்று சட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து டுநாட்பே நிறுவன வட்டாரங்கள் கூறும்போது, “சட்ட விதிகளுக்கு உட்பட்டே ரோபோ வழக்கறிஞர் ஆஜராகி வாதாடும் என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக நிறுவன தலைவர் ஜோஸ்வா பிரவுடர் கூறியதாவது: கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசுஅமைப்புகளுக்கு எதிராக சாமானிய மக்களால் பெரும் தொகை செலவழித்து சட்டரீதியாக போராட முடியவில்லை. 

அவர்களுக்காக செயற்கை நுண்ணறிவு மூலம் மிக குறைவான மாதசந்தா அடிப்படையில் சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். குறிப்பாக குடியுரிமை, மனித உரிமைகள், தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இப்போது முதல்முறையாக வாடிக்கையாளர் ஒருவருக்காக நீதிமன்றத்தில் எங்களது ரோபோ வழக்கறிஞர் ஆஜராக உள்ளது.

ஒருவேளை இந்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டால் அந்தஅபராத தொகையை நிறுவனமேசெலுத்தும். எங்களது வாடிக்கையாளருக்கு பொருளாதாரரீதியாக பாதிப்பு ஏற்பட அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!