வெற்றிவாகை சூடப்போகும் இரு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
வெற்றிவாகை சூடப்போகும் இரு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி : பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பரணி : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை 1 : எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். இழுபறியாய் இருந்த வேலை முடியும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும்.
ரோகிணி : பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டிருந்த செயலில் வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : உங்கள் முயற்சியில் கவனமுடன் செயல்படுங்கள். ஆதாயம் அதிகரிக்கும்.
திருவாதிரை : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் செயல்களில் அவசரம் வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3 : தொழில் புரியும் இடத்தில் நிதானம் தேவை. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை.

கடகம்
புனர்பூசம் 4 : உங்களை சோர்வடையச் செய்யும் வகையில் ஒரு சிலரின் நடவடிக்கை இருக்கும்.
பூசம் : தேவை இல்லாமல் மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். சிறுசிறு பிரச்னை ஏற்படும்.
ஆயில்யம் : உங்களைச் சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும். நிம்மதி இருக்க வேண்டிய நாள்.

சிம்மம்
மகம் : சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள்.
பூரம் : பிரச்னைகளை சமாளிப்பீர்கள். உறவினர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
உத்திரம் 1: வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி காண்பீர். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : உங்கள் செயல்களில் இன்று வேகமும் விவேகமும் இருக்கும்.
அஸ்தம் : சோர்வு விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் காணாமல் போகும்.
சித்திரை 1, 2 : உங்கள் செயல்களுக்கு பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அதிரடியாக செயல்படுவீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். செயல்களில் தடை, தாமதம் ஏற்படும்.
சுவாதி : எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றம் உண்டாகும். வார்த்தைகளில் கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3 : உங்கள் முயற்சிகளில் சிரமம் காண்பீர். நீண்ட இழுபறிக்குப்பின் ஒரு வேலை முடியும்.

விருச்சிகம்
விசாகம் 4 : பணி இடத்தில் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். விழிப்புணர்வு தேவை.
அனுஷம் : உங்கள் செயல் காரணமாக மற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உண்டாகும்.
கேட்டை : வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் காணமுடியாமல் போகும்.

தனுசு
மூலம் : தடைபட்டிருந்த வருவாய் இன்று உங்கள் கைக்கு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பூராடம் : முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் தனித்திறமை வெளிப்படும்.
உத்திராடம் 1: மற்றவர் நலனில் அக்கறை காட்டுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : பண விவகாரத்தில் கவனம் தேவை. புதிய முதலீடு பற்றிய எண்ணம் உண்டாகும்.
திருவோணம் : மற்றவரின் நெருக்கடியால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை.
அவிட்டம் 1, 2: செலவு அதிகரிக்கும். உறவினர் ஒருவரால் சங்கடம் உண்டாகி மறையும்

கும்பம்
அவிட்டம் 3, 4: மனதில் குழப்பம் உண்டாகும். திட்டமிட்டு செயல்படுவதில் சங்கடம் குறையும்.
சதயம் : குழப்பங்களைத் தவிர்ப்பதால் உங்கள் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும் நாள்.
பூரட்டாதி 1, 2, 3 : தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள்

மீனம்
பூரட்டாதி 4 : வெளியூர் பயணங்களால் சங்கடம் சந்திப்பீர்கள். செலவிற்கு தகுந்த வரவு வரும்.
உத்திரட்டாதி : எதிர்பாராத பிரச்னைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மருத்துவச் செலவு ஏற்படும்.
ரேவதி : எதிர்பாராத செலவு ஏற்படும். குடும்பத்தினர் வற்புறுத்தலால் சங்கடம் ஏற்படும்.