பண அதிர்ஷ்டத்தினை பெறவுள்ள இரு ராசிக்காரர்கள், ஆனால் மேஷ ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

#ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #2023
Prasu
1 year ago
பண அதிர்ஷ்டத்தினை பெறவுள்ள இரு ராசிக்காரர்கள், ஆனால் மேஷ ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: செலவுகள் செய்து முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பணியில் கவனம் தேவை.
பரணி: திட்டமிட்ட வேலையை செய்து முடிப்பீர்கள். அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். பண வரவு உண்டு. சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
ரோகிணி: பொருளாதார நிலை சீராகும். புதிய முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்ததை சாதிப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: வேலைக்காக முயற்சி மேற்கொண்டு, காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும்.
திருவாதிரை: புதிய நண்பர் உதவியுடன் முயற்சி ஒன்றில் ஈடுபட்டு நன்மை காண்பீர்கள். நன்மையான நாள்
புனர்பூசம் 1, 2, 3: முயற்சிக்கேற்ற வருவாய் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.

கடகம்
புனர்பூசம் 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
பூசம்: உங்கள் திறமை வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டு ஒரு முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள்.
ஆயில்யம்: சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். முயற்சி ஒன்று நிறைவேறும்.

சிம்மம்
மகம்: செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர்கள்.
பூரம்: பகைவர்களின் கை மேலோங்கும். முயற்சியில் தடை உண்டாகும். எச்சரிக்கை அவசியம்.
.உத்திரம் 1: பயணத்தில் எச்சரிக்கைத் தேவை. வாகனத்தின் வழியே செலவை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
அஸ்தம்: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
சித்திரை 1, 2: நண்பர்கள் ஆதரவுடன் முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள். ஆதாயமான நாள்.

துலாம்
சித்திரை 3, 4: உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி, சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.
சுவாதி: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் முயற்சி ஒன்றில் வெற்றியைக் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: தைரியத்துடன் செயல்படுவீர்கள். பகைவர்களால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.

விருச்சிகம்
விசாகம் 4: பிள்ளைகள் நிலையில் உயர்வு தோன்றும். வேலை வாய்ப்பு குறித்த செய்தி வரும்.
அனுஷம்: திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் வரக்கூடும். சொத்து விவகாரம் ஒரு முடிவிற்கு வரும்
கேட்டை: பெற்றோர் ஆதரவுடன் உங்கள் விருப்பம் நிறைவேறும். எண்ணியதை அடைவீர்கள். ஆதாயமான நாள்.

தனுசு
மூலம்: முயற்சி இழுபறியாகும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
பூராடம்: உறவினரிடம் ஏற்பட்ட பிரச்னை விலகும். விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள்.
உத்திராடம் 1: செயலில் தடைகளை சந்திப்பீர்கள். எதிர்பார்த்தவற்றில் சில நெருக்கடிகள் ஏற்படும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: தைரியத்துடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் முயற்சி ஒன்றில் வெற்றி அடைவீர்கள்.
திருவோணம்: திட்டமிட்டு செயல்பட்டு லாபமடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: உங்கள் எண்ணத்தை உடன் பிறந்தோரின் உதவியுடன் நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பண நெருக்கடிகளை சரி செய்வீர்கள்.
சதயம்: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த வருவாய் உண்டு. பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

மீனம்
பூரட்டாதி 4: செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: பணியில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாக இருக்கும்.
ரேவதி: கடுமையாக உழைத்தும் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் போகும்.