தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் திருமதி சார்ள்ஸ்?

#Resign
Prathees
3 years ago
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை  இராஜினாமா செய்தார் திருமதி சார்ள்ஸ்?

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்த ஆணையத்தின் பணிகளில் இருந்து நேற்று இராஜினாமா செய்துள்ளார்.

திருமதி பி.எம்.எஸ் சார்ள்ஸின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

20 வது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், திருமதி சார்ள்ஸ் தேர்தல் ஆணையத்திற்கு நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவேவேளை தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கும் நேற்று கூடிய சட்டப் பேரவை தீர்மானித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4