இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம் இலங்கை விஜயம்

#United National Party #Ranil wickremesinghe #Sri Lanka President #SriLanka #Lanka4
Kanimoli
3 years ago
இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள  பொதுநலவாய செயலாளர் நாயகம் இலங்கை விஜயம்

இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட்  அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 4 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் செயலாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டிற்கான ஐந்து நாள் பயணத்தில், அவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தி;க்கவுள்ளார்.
அத்துடன் பெப்ரவரி 3 வெள்ளிக்கிழமையன்று, கடல்சார் சிந்தனைக் களஞ்சியமான புவிசார் அரசியல் வரைபடத்தில் விரிவுரை ஆற்றவுள்ளார்
செயலாளர் நாயகம் பெப்ரவரி  1ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வந்து 2023 பெப்ரவரி 5 ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இருந்து புறப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4