பிள்ளையாரை வழிபட்டுவிட்டு பயணிக்கும் முறை எவ்வாறு ஏற்பட்டது? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
#விநாயகர்
#பிள்ளையார்
#ஏகதந்தன்
#ஐங்கரன்
#கணபதி
#spiritual
#God
#Pillaiyar
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- கள்ளவாரணப் பிள்ளையார் நாகபட்டின மாவட்டத்தில் அருள்பாலிக்கிரார். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின், மகாவிஷ்ணு, விநாயகர் பூஜை செய்யும் முன்பாகவே அதைப் பங்கிட்டுக் கொடுத்தார். இதனால் விநாயகர் அந்த குடத்தை எடுத்து இந்தக் கோவிலில் ஒளித்து வைத்தார். இதனாலேயே இத்தலத்திற்கு இப்பெயர் வந்தது.
- கர்நாடாவில் பங்கூர் கிராம மலைப்பகுதியில் 12 அடி உயர விநாயகர் சிலைக்கு இவ்வுர் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் விநாயகர் சிலை நிறத்தை மாற்றுவார்கள். இதன்படி இக்கோவில் விநாயகர் ஒரு நாளில் இரண்டிலிருந்து நான்குமுறை கூட வண்ணம் மாறிவிடுகிவார்.
- நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில், செம்பால் உருவாக்கப்பட்ட ஹேரம்ப கணபதி இருக்கிறார். இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட புண்ணியம் உண்டாகும்.
- விநாயகரை வழிபட்டு துவங்கும் செயல்கள் இடையூறு இல்லாமல் வெற்றி உண்டாகும். முற்காலத்தில் சிவன் திரிபுர சம்ஹாரத்திற்குப் புறப்பட்ட சென்ற போது தேர் அச்சு முறிந்தது. அவர் விநாயகரை வணங்காது சென்றதானாலேயே இது எற்பட்டது என்பதை அப்போது தான் உணர்ந்தார். பின்னர் விநாயகரை தியானித்தார். இவ்வாறு அவரை தியானித்த கோலத்திற்கு வல்லபகணபதி என்று பெயர் ஏற்பட்டது.
- தட்சயாகத்தின் போது திருமாலின் சக்கரத்தை விழுங்கிய கபாலம் விஷ்வக்சேனர் நடத்திய கோமாளித்தனத்தால் சிரித்து சக்கரத்தை வாயிலிருந்து வீழ்த்தியது. இதனை விநாயகர் எடுத்துக்கொண்டதால் விகடச் சக்கரவிநாயகர் என்ற பெயருடன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.