அவசர அவசரமாக நிச்சயதார்த்தம் செய்த எங்கேயும் எப்போதும் பட பிரபலம்

#Tamil Nadu #TamilCinema #Tamilnews #Cinema #Lanka4
Kanimoli
3 years ago
அவசர அவசரமாக நிச்சயதார்த்தம் செய்த எங்கேயும் எப்போதும் பட பிரபலம்

2011 ஆம் ஆண்டு இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் எங்கேயும் எப்போதும் மனதை உருக்கிய காதல் திரைப்படமான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமின்றி இந்த படத்தில் நடித்த ஜெய், அஞ்சலி, அனன்யா, சர்வானந்த் உள்ளிட்டோருக்கு பெரும் திருப்புமுனை படமாகவும் அமைந்தது.

அதிலும் இந்த படத்தில் நடித்த தெலுங்கு பிரபலம் சர்வானந்த் வெகு சீக்கிரமே தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார் அதன் பின் இவருக்கு நாளை நமதே, கணம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனவே தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான தெலுங்கு நடிகர் சர்வானந்த் தற்போது சைலன்டாக தன்னுடைய நிச்சயதார்த்தத்தை நடத்தி இருக்கிறார்.

38 வயதான இவர் அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப கலைஞரான ரக்‌ஷிதா ஷெட்டி என்பவரை இன்று கோலாகலமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் இவர்களுடைய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. மேலும் ரக்‌ஷிதா ஷெட்டி ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் பிரபலத்தின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களது நிச்சயதார்த்தத்திற்கு தெலுங்கு நடிகர் ராம்சரண் குடும்பத்துடன் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மிக சீக்கிரமே இவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர் எனவே தெலுங்கு திரையுலகில் மட்டுமல்ல தமிழ் ரசிகர்களும் சர்வானந்த் நிச்சயதார்த்தத்திற்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4