சுதந்திர தினத்தன்று பேரா ஏரியில் குளிக்க தயாராக வாருங்கள் என முகநூலில் பதிவிட்ட நபர் கைது

#Arrest #Police
Prathees
3 years ago
சுதந்திர தினத்தன்று பேரா ஏரியில் குளிக்க தயாராக வாருங்கள் என முகநூலில் பதிவிட்ட நபர் கைது

சுதந்திர விழா நடைபெறும் அதே நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்ட போராட்ட செயற்பாட்டாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மஹரகம பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் கணினி குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர், “நீங்களும் 75வது சுதந்திர தின விழாவில் அழைக்கப்பட்ட விருந்தினரா? “மக்கள் கண்ணியத்திற்கு நடுவில் பேரா ஏரியில் குளிக்க தயாராக வாருங்கள்” என அவர் தனது முகநூல் பக்கத்தில்,கருத்துகளை பதிவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேக நபர் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, கோட்டை ஜனாதிபதி மாளிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் இதற்கு முன்னர் சந்தேகநபருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4