தேன் உறுஞ்சும் விநாயகரை உங்களுக்கு தெரியுமா? பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்
#ஏகதந்தன்
#கணபதி
#விநாயகர்
#பிள்ளையார்
#ஐங்கரன்
#spiritual
#God
#Pillaiyar
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- தஞ்சாவூர் கோவில் பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்வர். அபிஷேக தேனை சிலை அப்படியே உறிஞ்சி விடும். இதனால் இந்த விநாயகரை தேன் உறுஞ்சும் விநாயகர் என்று அழைப்பர்.
- மருதமலை முருகன் கோவிலில் உள்ள பஞ்சமுக விநாயகருக்கு வலம்புரி, இடம்புரி என இரண்டு வகை துதிக்கைகள் இருக்கின்றன.
- திருவாரூர் கோவிலில் தாழ்வான பகுதியில் அமர்ந்துள்ள விநாயகரை பக்தர்கள் குனிந்து தான் கும்பிட வேண்டு்ம். இதனால் இவரை குனிந்து கும்பிடும் விநாயகர் என அழைக்கிறார்கள்.
- கர்நாடகா மைசூரு வைத்தியநாதர் கோயில் விநாயகர் குதிரை வாகனத்தின் மீது விஜயகணபதி என்ற பெயருருடன் ஒரு போர்வீரனைப் போல வீற்றிருக்கிறார்.
- மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் விநாயகர் கோயிலில் மயில் மீது உள்ள விநாயகரைக் காணலாம்.