11 மாதங்களாக நீடித்து வரும் ரஷ்ய போர் - இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகம்

Prabha Praneetha
3 years ago
11 மாதங்களாக நீடித்து வரும் ரஷ்ய போர் - இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகம்

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான  போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களை சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.


இதற்கிடையே, ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனுக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தத் தாக்குதலில் 11 பேர் பலியாகினர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 11 பேர் காயமடைந்தனர். கீவ் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன. தாக்குதலுக்குப் பிறகு சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியதாவது:- நீங்கள் அனைவரும் பார்த்தது போல் ரஷ்யா நேற்றிரவு உக்ரைன் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு கண்டனத்தையும் அமெரிக்காவின் சார்பாக காயமடைந்த அனைவருக்கும் அனுதாபத்தையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4