தெலுங்கு நடிகை ஜமுனா காலமானார்

#Death #Actress #Cinema #Lanka4
Kanimoli
1 year ago
தெலுங்கு நடிகை ஜமுனா காலமானார்

86 வயதான  பழம் பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா காலமானார் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு இன்று காலமானார்.
இவர் மறைவிற்கு திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் அதுமட்டுமின்றி தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதில் இருந்தே நாடகங்களில் நடித்து வந்த ஜமுனா கடந்த 1953 ஆம் ஆண்டு வெளியான புட்டிலு என்கிற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் இவர், தெலுங்கில் ராம்ராவ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்துள்ளார், இதுவரை 198 படங்களை தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்துள்ளார் ஜமுனா சினிமா மற்றும் இன்றி அரசியலிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

சினிமா உலகில் சாதித்தது மட்டுமின்றி 1980 களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார் ஜமுனா பிறகு 1980 ஆம் ஆண்டு ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதற்குப் பிறகு அவர் அரசியலில் இருந்து விலகினாலும் பாரதிய ஜனதா கட்சிக்காக 1990 ஆம் ஆண்டுகளில் பிரச்சாரம் செய்தார் இவரின் மறைவு இப்போது தெலுங்கு திரை உலகிற்கு பேரிழப்பாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!