கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Prabha Praneetha
1 year ago
கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவில், கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது.

கொரோனாவுக்கு முன்பு 2019-ம் ஆண்டில், இதய நோயால் 8 லட்சத்து 74 ஆயிரத்து 613 பேர் பலியாகியுள்ளனர் 

எனினும் 2020-ம் ஆண்டு, இதய நோய்க்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 28 ஆயிரத்து 741 ஆக உயர்ந்தது. 

அதற்கு முன்னர் 2003-ம் ஆண்டுதான் அதிகம் பேர் இதய நோயால் உயிரிழந்து இருந்தனர்.இதன்போது 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் பலியாகினர் 

இருந்தபோதும் 2020-ம் ஆண்டு இறந்தவர்கள் எண்ணிக்கை, அதை தாண்டிவிட்டது. 

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தவர்களே கொரோனா காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தமை கண்டறியப்பட்டது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!