இலங்கையில் அரங்கேறும் அவலங்கள் - பணத்திற்காக 15 வயது மகளை விற்பனை செய்த தாய்!

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #children #Women #Police #Arrest
Nila
3 years ago
இலங்கையில் அரங்கேறும் அவலங்கள் - பணத்திற்காக 15 வயது மகளை விற்பனை செய்த தாய்!

இலங்கையில் 15 வயது மகளை பணத்திற்காக வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சிறுமியின் தாய் மற்றும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 84 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகிறது. பாணந்துறை, கெசல்வத்த மற்றும்  கோரக்கன  பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சிறுமியின் தாயை ஏமாற்றி பணம் கொடுத்து சிறுமியை அழைத்துச் சென்று  துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதோடு, ஏனைய சிலருக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.  ஏனையவர்களை கண்டறிய  பொலிஸார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.  இந்நிலையில்  தற்போது குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 42, 45, 54 மற்றும் 84 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான தொழிலதிபரான பெண், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4