காமதேனு விநாயகரை பூஜித்து பெற்ற பெயர் தேனு விநாயகர். பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.
#கணபதி
#விநாயகர்
#பிள்ளையார்
#ஐங்கரன்
#ஏகதந்தன்
Mugunthan Mugunthan
1 year ago
- தமிழ்நாடு சேலம் ஆத்தூர் வாகனப்பிள்ளையார் கோயிலில் இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரியமூஞ்சுறு ஆக மூன்று மூஞ்சூறுகள் உள்ளன.
- இந்திரனின் வாகனமான ஐராவதம் இறைவனை பூஜித்தது போல் கற்பகமரம், சிந்தாமணி, காமதேனு ஆகியனவும் விநாயகரைப் பூஜித்துப் பேறு பெற்றன. இதனால் சிந்தாமணி விநாயகர், தேனு விநாயகர் எனும் பெயர்களைப் பெறுகிறார்.
- இந்தியாவின் வந்தவாசிக்கு அருகில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துள் பெரிய சன்னதியில் ஐராவத விநாயகர் உள்ளார்.
- துவார கணபதி ஆலயத்தில் வாயிலின் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகனுமாக துவார கணபதி, துவார சுப்பிரமணியர் என்று வீற்றிருப்பார்
- வெல்லத்தைப் பிடித்து வைத்து அதில் பிள்ளையாரை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இத்தகைய பிள்ளையார் வெல்லப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.