உள்ளூராட்சி தேர்தல்: ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

#SriLanka #Sri Lanka President #Election #Election Commission
Mayoorikka
3 years ago
உள்ளூராட்சி தேர்தல்: ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திங்கட்கிழமை  தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் தேவையான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தொடர்பான வர்த்தமானி இன்று அல்லது நாளையதினம் அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்கு இதுவரை அரச அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4