சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்!

#world_news #Pakistan #IMF
Mayoorikka
1 year ago
சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்!

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கான பாகிஸ்தானின் கடன் மேலாண்மை திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான கூடுதல் மானியத்தை 335 பில்லியனாகக் கட்டுப்படுத்த, மின்சார கட்டணத்தை ஒரு அலகுக்கு 11 முதல் 12.50 ரூபாவால் அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் கோரியது.

உலக வங்கியும்  மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது.

எனினும் எதிர்வரும் ஒக்டோபரில் தேர்தல் நடைபெறவுள்ளமையால், இந்த திட்டம் எதிர்விளைவை தரும் என்று கூறி, பாகிஸ்தானிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தநிலையில் 7 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நிலுவையில் உள்ள ஒன்பதாவது மதிப்பாய்வை முடிக்க சர்வதேச நாணய நிதியமும்  பாகிஸ்தானும்; பேச்சுவார்த்தை நடத்தின.

இருப்பினும் பாகிஸ்தான் சமர்ப்பித்த மேலாண்மைத் திட்டத்தில் தொழில்நுட்ப பிரச்சினை இருப்பதை கண்டறிந்த, சர்வதேச நாணய நிதியம், குறித்த திட்டத்தை நிராகரித்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!