மிஷ்கின் விஜய் கூட்டணி கடுப்பில் லோகேஷ்

#Vijay #Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
1 year ago
மிஷ்கின் விஜய் கூட்டணி கடுப்பில் லோகேஷ்

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவருடைய 67வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தளபதி 67 என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. படத்தின் ஒரு பகுதியாக தளபதி 67 படக்குழு தற்போது ஜம்மு காஷ்மீர் சென்று இருக்கிறது.

தளபதி 67 இல் நடிக்கும் நட்சத்திரங்களின் பெயர்கள் சில தினங்களுக்கு முன் பட குழுவால் அப்டேட் செய்யப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் தற்போதைக்கு சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், இயக்குனர் மிஸ்கின் ஆகியோர் விஜய்க்கு வில்லனாக உறுதியாக இருக்கிறார்கள்.

தளபதி 67 படப்பிடிப்பில் இயக்குனர் மிஸ்கின் பேசும் நகைச்சுவை பேச்சுக்கும், அவருடைய குறும்புத்தனத்திற்கும் மொத்த பட குழுவுமே அடிமையாக இருக்கிறதாம். தளபதி விஜய்யை பொறுத்த வரைக்கும் அவருக்கு நகைச்சுவையாக பேசுபவர்கள் ரொம்பவே பிடிக்கும். அந்த வகையில் இயக்குனர் மிஸ்கினை விஜய்க்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டதாம்.

இயக்குனர் மிஸ்கினின் நகைச்சுவை பேச்சால் ஈர்க்கப்பட்ட தளபதி விஜய் அவர் அருகிலேயே உட்கார்ந்து கவனித்து வருகிறாராம். மேலும் மிஸ்கினால் படப்பிடிப்பு தளத்தில் விஜய் எப்பொழுதும் ஜாலியாகவே இருக்கிறாராம். ஆனால் இது இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு ஒரு மிகப்பெரிய பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

தளபதி 67 தொடங்கப்பட்ட நேரத்தில் இயக்குனர் மிஸ்கின் படப்பிடிப்பு தளத்தில் என்ன காட்சிகள் எடுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பொது மேடைகளில் சொல்லி நடிகர் விஜய்யை ரொம்பவே சங்கடத்திற்கு உள்ளாக்கினார். இதனால் மிஸ்கின் இந்த படத்தில் இருக்க வேண்டாம் என சொல்லும் அளவிற்கு கோவமாக இருந்து வந்தார் விஜய்.

ஆனால் தற்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. இயக்குனர் மிஸ்கின் படம் முழுக்க இருக்குமாறு காட்சிகள் அமைக்கும்படி விஜய், லோகேஷ் கனகராஜிடம் கேட்டுக்கொண்டு உள்ளாராம். மிஸ்கின் இருந்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று விஜய் சொல்லும் அளவிற்கு இருவரும் ஜாலியாக இருக்கிறார்களாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!