பெரிய பட்ஜெட்டில் உருவான டாப் 5 தமிழ் படங்கள்

#Kamal #Vijay #Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
1 year ago
பெரிய பட்ஜெட்டில் உருவான டாப் 5 தமிழ் படங்கள்

தற்போது கோலிவுட்டில் உருவாகும் படங்கள் அனைத்தும் குறைந்தது 100 கோடி பட்ஜெட்டிலாவது எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதிலும் இதுவரை தமிழில் வெளியான டாப் 5 அதிக பட்ஜெட் படங்கள் எவை என்பதை பார்ப்போம்.

எந்திரன்: 2010 பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான எந்திரம் திரைப்படம் சுமார் 196 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் சங்கர் உயரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரம்மிப்பூட்டும் வகையில் படத்தை உருவாக்கியிருப்பார். இந்தப் படம் உலக அளவில் தாறுமாறாக வசூலை வாரி குவித்து பாக்ஸ் ஆபிஸையும் விரட்டியது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக 2.O படமும் வெளியானது.

தர்பார்: 2020 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை லைக்கா தயாரிப்பு நிறுவனம் 215 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருப்பார். படத்திற்கும் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைத்தது.

வாரிசு: இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் உலக அளவில் வெறும் 16 நாட்களில் 250 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குறித்து சாதனை படைத்தது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ராஜு 225 கோடி பொருட்ச அளவில் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்: மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலக அளவில் மாபெரும் வெற்றியைக் கண்டது. வரலாற்றுக் கதையம்சம் கொண்ட இந்த படத்தை 250 கோடி பொருட்செலவில் தயாரித்தனர். இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.

2.O: பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான 2.0 திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் ரஜினிகாந்த் அக்ஷய் குமார் எமி ஜாக்சன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தை 270 கோடி பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்தது.

இவ்வாறு இந்த 5 படங்களும் இதுவரை தமிழில் வெளியான அதிக பட்ஜெட்டில் உருவான படங்கள் ஆகும். அதிலும் 3 படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடையது தான். ரஜினியை வைத்து தயாரிப்பாளர்கள் இவ்வளவு பணத்தை கொட்டுவதற்கு காரணம், நிச்சயம் லாபம் கிடைக்கும் என்று அவர் மீது இருக்கும் அபரிவிதமான நம்பிக்கை தான். அதற்கேற்றார் போல் இந்த படங்கள் அனைத்தும் பல கோடி லாபம் பார்த்து பாக்ஸ் ஆபிஸையும் மிரட்டியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!