தளபதி 67 படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர்

Mani
3 years ago
தளபதி 67 படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர்

தற்போது தமிழ் திரை உலகில் ஆர்வமாக எதிர்பார்க்கப்படும் படம்தான் தளபதி 67 அதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னதான் தளபதி 67 விஜய் படமாக இருந்தாலும் அவர் லோகேஷ் உடன் இணைந்துள்ளது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
லோகேஷ் கதை சொல்லும் விதமும் அவரின் படங்களில் வரும் கதாபாத்திரமும் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கைதி,மாஸ்டர்,விக்ரம் என்ற படங்களை இயக்கினார் இவர், படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருவது ரசிகர்களால் ஈர்க்கப்படுகிறது.

எடுத்துக்காட்டிற்காக கைதி படத்தில் வரும் நெப்போலியன் கதாபாத்திரமும்,விக்ரம் படத்தில் வரும் ஏஜென்டினா கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது இந்நிலையில் இதுபோன்ற அழுத்தமான படங்களில் தங்கள் நாயகனை காண விஜய் ரசிகர்கள் ஆவலாக இருந்தன, தற்போது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே தளபதி 67 படத்தின் மூலம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 67 முழுக்க முழுக்க லோகேஷன் ஸ்டைலில் உருவாக்கி வருகிறது என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார் எனவே இப்படத்தில் வித்தியாசமான விஜயை நாம் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாளத்தை சேர்ந்த மேத்யூ தாமஸ் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பேசிய தாமஸ் தான் நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார், மேலும் தளபதி 67 படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4