முருகனுக்கு தைப்பூசம் விரதம் - விரதத்தின் முக்கிய பலன்கள்
முருகன் தமிழ் கடவுள் என்று அனைவராலும் கொண்டாடி மகிழும் தெய்வமாகும் அப்படிப்பட்ட முருகனை கொண்டாடும் திருவிழாக்களின் முக்கியமானவை வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி விரதம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகும், அன்னையிடம் வேல் வாங்கி திருக்கையில் வேல் ஏந்திய நாள் தான் தைப்பூசம் திருநாளாகும்.பிப்ரவரி 5ஆம் நாள்( தை மாதம் 22ஆம் தேதி )தைப்பூசம் ஆகும்.
தை மாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்புடையதாகும், தைப்பூச நாளில் தான் பிரபஞ்சத்தின் நீர் தோன்றியது என புராணங்கள் கூறுகின்றன அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு,காற்று ஆகாயம் உருவாகின என்பது நம்பிக்கையாகும்.
பழனி மலையில் முருகன் ஆண்டியாக அமர்ந்திருக்கும் போது சூரனை அளிக்க தேவி தன் முழு சக்தியையும் கொண்டு ஒரு வேலை உருவாக்கி வழங்கி அருளிய நாள் தான் தைப்பூசம் அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூச திருவிழா மற்ற
முருகன் கோவில்களை காட்டிலும் சிறப்பாக கொண்டாடப்படும்.
முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்ட நாள் தைப்பூசம் என்பது நம்பிக்கை எனவே அந்த நாளில் முருகனை மனம் உருக வேண்டிக் கொண்டால் திருமணம் வரம் கிடைக்கும் என்பார்கள் பக்தர்கள்.
காலை முதல் மாலை வரை முருகனை நினைத்து உபவாசம் இருந்து முருகனை வழிபாடு செய்வது நல்லது இதில் காலை மதியம் என இருவேளையும் பழம், பால் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பாகும், முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் சேர்த்து வழிபடுவது நல்லது முடிந்தால் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பாகும்.