பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்

Mani
1 year ago
பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்

 

தமிழ்,தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ள மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

1971 ஆம் ஆண்டு குட்டி என்ற இந்தி படத்தில் பாடகியாக அறிமுகமானவர் வாணி ஜெயராம், இவர் 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் வரும் மல்லிகை என் மன்னன் மயக்கும் பாடல் பாடி பிரபலமானார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

வாணி ஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகியாக இந்திய தேசிய விருதுகளை பெற்றுள்ளார் இந்நிலையில் தமிழ்நாடு,ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மொழிகளில் சிறந்த பின்னணி பாடகியாக விருதுகளை பெற்றுள்ளார் இவர். மேலும் கடந்த வாரம் இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்ம விபூஷன்,பத்ம பூஷன்,பத்மஸ்ரீ விருதுகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது இந்த விருதுகளின் பட்டியலில் 6 பேருக்கு பத்மவிபூஷன், 9 பேருக்கு பத்மபூஷன்,91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய  திரையுலகின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார் இவருக்கு தற்போது 77 வயதாகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!