நகைப் பிரியர்கள் ஹேப்பி- தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது

Mani
3 years ago
நகைப் பிரியர்கள் ஹேப்பி- தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது

பட்ஜெட்டுக்கு பிறகு ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று குறைந்தது.கடந்த மாதம் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு 43 ஆயிரத்தை தாண்டியது.இதையடுத்து தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிபடியாக உயர்ந்து வந்தது.
நேற்று ஒரே நாளில், ரூ.720 விலை உயர்ந்து வரலாறு காணாத வகையில் 44,040 ரூபாயாக விற்பனையானது தங்கம்.
இந்நிலையில் இன்று,22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 குறைந்து 5,440 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 520 ரூபாய் வரை குறைந்து 43,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.65 குறைந்து இன்று 5,802 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 520 ரூபாய் வரை குறைந்து 46,416 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.40 குறைந்து 76.40 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 76,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4