யாரிடமும் எதையும் எதிர்பார்க்க கூடாது. எல்லோரோடும் லிமிட்டாக பழகணும். இன்றைய 5 பொன்மொழிகள் 06-02-2023
#Ponmozhigal
#today
#information
Mugunthan Mugunthan
2 years ago

இன்றைய நாள்
இனிதே அமையட்டும்
காலை வணக்கம்.

ஆடும் உலகில்
அடங்கிப்போவது 2022.
கூடும் உலகு
குவியப்போவது 2023க்குள்.
நாம் எங்கே நிற்கிறோம்?
நாம் எதை செய்யப்போகிறோம்?
நிதானம்..... நிதானம்
ஆம்
நிதானமே ஆயுதம்.
நிதானமாய் உனக்குள் யோசி.
பதில் உன்னிடமே உள்ளது.

2022 கற்றுத்தந்தவை
யாரிடமும் எதையும் எதிர்பார்க்க கூடாது
எல்லோரோடும் லிமிட்டாக பழகணும்
யாரையும் முன்னிலைப்படுத்த கூடாது.
யாருமே நம் கூட வாழ் நாள் முழுவதும் இருக்க மாட்டாங்க
எல்லோருமே நாங்க ஒரு பொழுது போக்குத்தான்.
யாருக்குமே நாம் முதன்மை இல்லை.
பெற்றோரைத்தவிர யாருமே நிரந்தரமில்லை
வேலையில்லையின்னா யாருமே மதிக்கமாட்டாங்க
பழையதை திரும்பி நினைக்கவே கூடாது.
விட்டுட்டு போனவங்களை திரும்பி பார்க்கவே கூடாது.

நீ ஆயிரம் பொய் சொல்
தவறில்லை.
ஆனால் அது
உனது அல்லது பிறர்
உயிருக்கோ
உடலுக்கோ
உள்ளத்துக்கோ
தீது இல்லாது இருக்க
வேண்டும்.

புதிய வருடம்
எமக்கு எதையுமே
கொண்டுவரப்போவதில்லை.
நாமே புதிய வருடத்திற்கு
இப்பொழுதே ஆயத்தம்
செய்தல் வேண்டும்.
ஆம்.
திடம்கொள் மனதோடு
திசை எங்கும்
ஒரு முயல்வால் தாக்கு.



