சூடானில் கால்நடை முகாம் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 21 பொதுமக்கள் மரணம்

#South Sudan #GunShoot #Death #world_news #Tamilnews #Lanka4
Prasu
1 year ago
சூடானில் கால்நடை முகாம் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 21 பொதுமக்கள் மரணம்

தெற்கு சூடான் நாடு, 2011-ல் சூடானில் இருந்து சுதந்திரம் அடைந்தது. ஆனால் சிறிது காலத்திலேயே உள்நாட்டுப் போல் ஆரம்பித்து, அதில் 3.8 லட்சம் மக்கள் பலியாகினர். 

ஒரு வழியாக உள்நாட்டுப் போர் 2018-ல் முடிவுக்கு வந்தது. ஆனால், ஆயுதம் ஏந்திய உள்நாட்டு போராளிகள் மற்றும் போட்டி இனக்குழுக்களால் நடத்தப்படும் வன்முறையால் நாடு தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று மத்திய ஈக்வடோரியாவின் காஜோ-கேஜி கவுண்டியில் உள்ள, கால்நடை முகாம் மீது ஆயுதமேந்திய மேய்ப்பர்கள் பழிவாங்கும் தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதில், 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மாவட்ட ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பழிக்குப் பழியாக நடந்த இந்த தாக்குதலுக்கு கவுண்டி ஆணையர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தெற்கு சூடானின் பல பகுதிகளில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மக்களின் அமைதிக்காக பிரார்த்தனை செய்யும்படி போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். 

அத்துடன், கேன்டர்பரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து தேவாலய பொதுச்சபை நடுவர் ஆகியோருடன் போப் பிரான்சிஸ் இன்று தெற்கு சூடானில் அமைதி யாத்திரை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!