பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி காலமானார்

#world_news #Pakistan #President #Death
Prabha Praneetha
1 year ago
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி; பர்வேஸ் முஷாரப் தனது 79வது வயதில் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

2016 முதல் அவர் தமது நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார், 
இதனையடுத்து கடந்த சில வாரங்களாக அவர் செயற்கை சுவாச ஆதரவில் இருந்து வந்தார்;

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இந்திய புதுடில்லியில் பிறந்த முஸாரப், 2001 முதல் 2008ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானிய ஜனாதிபதியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் , ஜெனரல் முஷாரப் மருத்துவ சிகிச்சைக்காக மார்ச் 2016 இல் துபாய்க்கு சென்றிருந்தார்,அவர் 2018 இல்  உயிருக்கு ஆபத்தான நோயான அமிலாய்டோசிஸ் நோயால் கண்டறியப்பட்ட பின்னர் அதன்பிறகு நாடு திரும்பவில்லை.

முன்னாள் பிரதம மந்திரி பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கு மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கு ஆகியவற்றில் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்பட்டார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!