பலூன் நெருக்கடி இழுபறி - பதிலுக்கு தயாராகுமாறு அமெரிக்காவை சீனா எச்சரிப்பு

#America #China
Prathees
1 year ago
பலூன் நெருக்கடி இழுபறி - பதிலுக்கு தயாராகுமாறு அமெரிக்காவை சீனா எச்சரிப்பு

அமெரிக்கா தனது நாட்டுக்கு சொந்தமான பலூனை ஏவுகணை மூலம் அழித்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதற்காக அமெரிக்கா ராணுவத்தை பயன்படுத்துவதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா கூறுகிறது.

அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து தேவையான பதிலளிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவிலியன் விமானம் போன்ற பலூனை வீழ்த்தியது மிகையானது.

இது சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறுவதாக சீனா கூறுகிறது.

இதேவேளை, விபத்துக்குள்ளான சீன பலூனின் பாகங்களை அமெரிக்கா தற்போது சேகரித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உளவு பார்க்க சீனா பயன்படுத்தியதாகக் கூறப்படும் பலூனை அமெரிக்க ஜனாதிபதி  ஜோ  பைடனின் உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேல் வானில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி சீனாவின் சந்தேகத்திற்குரிய பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!