இரு பிள்ளைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த தந்தை!

#SriLanka #Police #Crime #Death
Mayoorikka
3 years ago
இரு பிள்ளைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த தந்தை!

தந்தை ஒருவர் இரு பிள்ளைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று  அரநாயக்க, கொடிகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 குறித்த நபரின் சடலமும் அதற்கு அருகிலிருந்து இரு சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கருதப்படும் நபர் 33 வயதான ஒருவரெனவும், ஏனைய சிறுவர்கள் இருவரும் 6 மற்றும் 9 வயதுடைய அவரின் பிள்ளைகள் என்றும் தெரியவந்துள்ளது.

சிறுவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்கள் இருவரையும் கொலை செய்த பின்னர் அவர்களின் தந்தை உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாமென பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4