தமிழ் ஹீரோக்களால் புறக்கணிக்கப்பட்ட பாபி சிம்ஹா.

Mani
3 years ago
தமிழ் ஹீரோக்களால் புறக்கணிக்கப்பட்ட பாபி சிம்ஹா.

 வசந்த முல்லை என்ற திரைப்படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வசந்த கோகிலா என்ற பெயரில் தாயாராகியுள்ளது பாபி சிம்ஹாவுடன் காஷ்மிரா பரதேசி நடித்துள்ளார்.முக்கியமான கேரக்டரில் கன்னடத்தில் ரக்ஷித் செட்டியும், தெலுங்கு தமிழில் ஆர்யாவும், நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தம்மா இயக்கி உள்ளார், ரஞ்சனி கல்லூரியுடன் இணைந்து பாபி சிம்ஹாவின் மனைவியும் நடிகையுமான ரேஷ்மி மேனன் நடத்தியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது, கன்னட டீசரை சிவராஜ்குமார், தெலுங்கு டீசரை சிரஞ்சீவியும் ,வெளியிட்டனர் ஆனால் தமிழ் டீசரை எந்த ஹீரோவும் வெளியிடவில்லை. நேற்று நடந்த விழாவுக்கு வந்த பத்திரிக்கையாளர்களைக் கொண்டு வெளியிட்டனர்,

இது குறித்து பின்னர் பேசிய பாபி சிம்ஹா தமிழிலும் பெரிய ஹீரோவை கொண்டு வெளியிடலாம் என்று யோசித்தோம் அதற்கு சரியான நேரம் அமையவில்லை என்றாலும் படத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்டத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி என்றார்.

பின்னர் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்டபோது அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என்று பதிலளித்தார் என்றாலும் தனக்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நடித்துக் கொடுத்த ஆர்யா ஒரு செல்போன் மெசேஜை பார்த்து விட்டு வீட்டுக்கு அழைத்து டீசரை வெளியிட்ட சிரஞ்சீவி சிவராஜ்குமார் ஆகியோரை நெகிழ்ந்து பாராட்டினார் பாபி சிம்ஹா.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4