இன்றைய வேத வசனம் 07.02.2023: தேவன் நம் ஒவ்வொருவரையும் அணுகி, நம்மை மீட்டுஇ நல்ல மேய்ச்சலில் அடைக்கலம் தருகிறார்.

#Bible #JESUS-BLOOD
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 07.02.2023: தேவன் நம் ஒவ்வொருவரையும் அணுகி, நம்மை மீட்டுஇ நல்ல மேய்ச்சலில் அடைக்கலம் தருகிறார்.

ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி. எசேக்கியேல் 34:12

பாஸ்டர் வாரன், தமது தேவாலயத்தில் ஒரு நபர் தம் மனைவி மற்றும் குடும்பத்தைக் கைவிட்டார் என்று கேள்விப்பட்டபோது, ​​​​அவரோடு பேசும்படி தற்செயலாக அந்த மனிதரைச் சந்திக்க உதவுமாறு தேவனிடம் கேட்டார். தேவன் செய்தார்! வாரன் ஒர் உணவகத்திற்குள் நுழைந்தபோது, ​​​​அருகிலுள்ள சாவடியில் அந்த மனிதரைக் கண்டார். “பசியோடிருக்கும் எனக்கும் இடம் உண்டா?” என்று அவரிடம் கேட்டார், சீக்கீரமாக அவர்கள் ஆழமாகப் பகிர்ந்து கொண்டு ஒன்றாக ஜெபித்தனர்.

எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் தேவன் தமது மந்தையை மேய்ப்பேன் என்று கூறியது போல; ஒரு போதகராக, வாரன் தமது தேவாலயத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மேய்ப்பனாகச் செயல்பட்டார்.

தேவன் தம்முடைய சிதறிய ஆடுகளைத் தேடி, அவற்றை மீட்டு, ஒன்று சேர்ப்பதாக வாக்களித்தார் (எசேக்கியேல் 34:12-13). “அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்” என்றும், “காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டு (வருவேன்)” என்றும், “எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்” என்றும் சொன்னார் (வ. 14–16). தம் ஜனங்களின் மீதான தேவனின் அன்பு இந்த ஒவ்வொரு உருவகத்திலும் எதிரொலிக்கிறது.

எசேக்கியேலின் வார்த்தைகள் தேவனின் எதிர்கால செயல்களை எதிர்நோக்கியிருந்தாலும், அவை தேவனின் நித்திய இதயத்தையும் மேய்ப்பனாக வெளிப்படப்போகும் இயேசுவையும் பிரதிபலிக்கின்றன. 

நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவன் நம் ஒவ்வொருவரையும் அணுகி, நம்மை மீட்டு, நல்ல மேய்ச்சலில் அடைக்கலம் தருகிறார். ஆடுகளுக்காகத் தம்முடைய உயிரைக் கொடுக்கிற நல்ல மேய்ப்பரை நாம் பின்பற்ற வேண்டும் என்று அவர் ஏங்குகிறார் (பார்க்க யோவான் 10:14-15).

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4