பாகிஸ்தானை மீட்க கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு பைனான்சியல் டைம்ஸ் வலியுறுத்து

#IMF #Tamilnews #Lanka4 #Pakistan #China
Prathees
1 year ago
பாகிஸ்தானை மீட்க கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு  பைனான்சியல் டைம்ஸ் வலியுறுத்து

இலங்கையை போன்று பொருளாதார பேரழிவில் சிக்கியுள்ள பாகிஸ்தானை மீட்பதற்கு பெரிஸ் கிளப், சீனா மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று பிரித்தானியாவின் பைனான்சியல் டைம்ஸ் வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானிய அரசாங்கம் டொலர் கட்டுப்பாட்டை நீக்கியதன் விளைவாக ரூபாயின் மதிப்பு கணிசமான அளவு வீழ்ச்சியடைந்து நாட்டிற்கான அந்நிய செலாவணி கையிருப்பு அச்சமளிக்கும் வகையில் குறைந்துள்ளது.

270 பில்லியன் டொலர்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 79 சதவீத பொதுக் கடன் என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்தநிலையில், பாகிஸ்தான் தற்போது சமகாலத்தில் மிகவும் கடினமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறது.

அரசாங்கத்தின் திறமையின்மை, பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட அழிவு போன்றவற்றால் பாகிஸ்தான் கடினமான நிலையை எதிர்கொள்கிறது என்று பைனான்சியல் டைம்ஸ் அறிக்கை கூறியுள்ளது.

தேசத்தின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் பல தசாப்தங்களாக குழப்பம், மோசடி மற்றும் மோசமான நிர்வாகத்திற்கு காரணமாக இருந்துள்ளனர் என்றும் பைனான்சியல் டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

உணவு மற்றும் மருந்து விநியோக விடயத்தில் இலங்கையைப் போல பாகிஸ்தான் வங்குரோத்து அடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இலங்கையை விட பத்து மடங்கு மக்கள் தொகையை கொண்ட பாகிஸ்தானில், அணு ஆயுதத் தலையீடுகள் மற்றும் தீவிரவாத வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதால், அந்த நாட்டுக்கு சர்வதேச கடன் வழங்குநர்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்கள், உதவிகளை வழங்கும் சூழ்நிலை தவிர்க்கப்பட்டு வருவதாகவும் பைனான்சியல் டைம்ஸ் கூறுகிறது.

இதேவேளை பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டொலர்களாக அல்லது சுமார் மூன்று வார மதிப்புள்ள இறக்குமதிகளை மாத்திரமே மேற்கொள்ளும் அளவுக்கு குறைந்துள்ளதாக பிரித்தானியாவின் பைனான்சியல் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!