அருளானந்தர் ஆலயத் தேர் திருவிழா
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உட்பட்ட வடக்கு பேட்டையில் பழமையான புனித அருளானந்தர் தேவாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அருள் ஆனந்தர் தேவாலயம் திருவிழா எளிமையாக கோயில் வளாகத்துக்குள்ளே நடைபெறும் சில ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை கொரோனா காரணமாக.
இந்த ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி கோயில் கொடியேற்றம் ஏற்றப்பட்டது அன்று முதல் கடந்த 4 தேதி வரை ஜெபமாலை திருப்பணி நடைபெற்றது .பெங்களூர் ஊட்டி கடம்பூர் பகுதி சேர்ந்த பாதிரியார்கள் பிரசங்கம் செய்கிறார்கள்.
மலர்களாலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருளானந்தர் தேர் வீதி உல நடைபெற்றது நேற்று முன்தினம் இரவு தேருக்கு முன்னதாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி இறைவனை வழிபட்டனர். தேர் தேரானது கடைவீதி வடக்குப்பேட்டை வன்னியர் வீதி திப்பு சுல்தான் ரோடு வழியாக ஊர்வலம் மீண்டும் ஆலய அடைந்தது இரவு 9 மணிக்கு கருணை பூஜை உடன் விழா முடிந்தது. விழா ஏற்பாடுகளை சக்தி அருளானந்தர் ஆலய பாதிரியார் ரவி லாரன்ஸ் செய்திருந்தார்.