நிலைமை தெரியாமல் கமல், அமலா பால் பற்றி ரசிகர்கள் பேச்சு.

Mani
1 year ago
நிலைமை  தெரியாமல் கமல், அமலா பால் பற்றி  ரசிகர்கள் பேச்சு.

உலக நாயகன் கமல் ஹாசனுடன் அமலா பால்  ஜிம்மில் எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

உலக நாயகன் கமல் ஹாசன் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யத் தவறாதவர். இந்த வயதிலும் மனிதர் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு இருக்கிறார். இந்நிலையில் ஜிம்மில் கமல் ஹாசனும், நடிகை அமலா பாலும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது. அதை பார்த்த கமல் ரசிகர்களோ, ஆண்டவரை பார்த்தால் இந்தியன் படத்தில் நடித்தபோது இருந்தது போன்றே இளமையாக இருக்கிறார். ஆனால் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் என்கிறார்கள்.

கமல்ஹாசனின் இளமை தோற்றத்திற்காக ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். எவ்வாறாயினும், சில சமூக ஊடக பயனர்கள் இளமை தோற்றத்தை ஏற்படுத்துவது பற்றி அவருக்கு சிறந்த புரிதல் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

கமல் ஹாசனும், அமலா பாலும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதே இல்லை. கடந்த 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். அது எப்படியோ தற்போது வைரலாகிவிட்டது. முதலில் கமலுடன் அமலா பாலை பார்த்ததும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறார்களா, அறிவிப்பு எதுவும் வரவில்லையே என்றனர் சினிமா ரசிகர்கள். அதன் பிறகே பழைய புகைப்படம் தான் தூசு தட்டப்பட்டு ஷேர் செய்யப்படுவது தெரிந்து அமைதியானார்கள்.

கெரியரை பொறுத்தவரை ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல் ஹாசன். அவர் ஹெலிகாப்டரில் படப்பிடிப்புக்கு சென்று வருவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பே இந்தியன் 2 ஷூட்டிங் துவங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். அப்பொழுது நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது தான் துவங்கியிருக்கிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பு நின்ற பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்தார் கமல் ஹாசன். அந்த படம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. கமலின் கெரியரிலேயே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது விக்ரம். அந்த படத்தின் அடுத்த பாகத்தையும் எடுக்கவிருக்கிறார்கள். கமல் தற்போது கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார்.

இந்த ஆண்டு பிக்பாஸ் சீசனில் கமல்ஹாசன் தொகுப்பாளராக இருந்தார். அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார், ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட கமல் கிண்டல் செய்யப்பட்டார். இதற்கு போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் கமல் விமர்சித்ததால் இருக்கலாம்.

விக்ரமனுக்கு ஜிங்ஜாக் அடித்தார் கமல் என விமர்சனம் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!