அஜித் ஒரு இயக்குனரை தேர்வு செய்யும் முறை பற்றி மூத்த பத்திரிகையாளர் கூறிய தகவல்

Mani
1 year ago
அஜித் ஒரு இயக்குனரை தேர்வு செய்யும் முறை பற்றி மூத்த பத்திரிகையாளர் கூறிய தகவல்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இவர்களது கூட்டணியில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த  வெற்றியைப் பெறாததால், துணிவு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க வேண்டிய கட்டாயம் இந்தக் கூட்டணிக்கு ஏற்பட்டது.

அதற்கு ஏற்றாற்போல துணிவு திரைப்படமும் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இவ்வெற்றியால் அஜித் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிப்பதாக இருந்தது

விக்னேஷ் சிவனின் கதையை அஜித்தும், லைகா நிறுவனமும் ஒப்புக் கொள்ளாததால் படக்குழுவினர் விக்னேஷ் சிவனை AK62 படத்திலிருந்து அதிரடியாக  வெளியேற்றினர். அதையடுத்து,  AK62 படத்தை, மகிழ் திருமேனி  இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அஜித் ஒரு இயக்குனரை எவ்வாறு தேர்வு செய்கின்றார் என்பது பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது அஜித் முதல்முறையாக ஒரு புது இயக்குனரை சந்தித்து அறிமுகமாகிறார். பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவரைச் சந்திக்க விரும்புவதாக இயக்குனரிடம் அஜீத் கூறுவார்.

அதைத்தொடர்ந்து அந்த பத்து நாட்களில் அஜித்திற்கு நல்ல விஷயங்கள் நடந்தாலோ அல்லது விரும்பத்தகாத விஷயங்கள் நடக்காமல் இருந்தாலோ அந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க சம்மதிப்பாராம்.
ஒருவேளை நேர்மாறாக ஏதேனும் நடந்தால் அது எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் அவரின் இயக்கத்தில் நடிக்கமாட்டாராம் அஜித். இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!