உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி

#world_news #D K Modi #India #Prime Minister #Tamilnews #Lanka4
Prasu
1 year ago
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி

சர்வதேச நாடுகளின் தலைவர்களின் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் அவர்களின் ஏற்பையும் அளவிடுவதற்கு பல முன்னணி அமைப்புகள் கருத்து கணிப்புகளை அவ்வபோது வெளியிடும். இது நாட்டு மக்களின் தலைவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. 

அதிக ரேட்டிங் கொண்ட தலைவர்களை பன்னாட்டு மக்கள் அதிகம் விரும்புவதாகவும் குறைந்த ரேட்டிங் கொண்ட தலைவருக்கு அந்த நாட்டில் அதிருப்தியில் உள்ளதாகவும் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் புரிந்து கொள்ளப்படும்.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகில் 22 முன்னணி நாடுகளில் பொது மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. 

அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 78% ஆதரவுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

மெக்சிகோ அதிபர் லாபஸ் ஒபராடர் 68% உடன் இப்ப பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஏழாவது இடத்திலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் 13 வது இடத்தையும் பிடித்துள்ளன. 

கடைசி இடங்களை ஜப்பான் பிரதமர் மற்றும் நார்வே பிரதமர் ஆகியோர் பிடித்துள்ளனர் இவர்களுக்கு 21% ஆதரவு தான் கிடைத்துள்ளது.

இதே நிறுவனம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்திய கருத்துக்கணிப்பில் 72 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி தான் முதலிடத்தில் இருந்தார். 

இந்த ஆண்டு ஆறு சதவீதம் அதிகம் பெற்று 78% ஆதரவுடன் முதலிடம் கிடைத்துள்ளது .இந்த கருத்து கணிப்பு ஜனவரி 26, 31 அன்று நடத்தப்பட்ட தரவுகளில் இருந்து பட்டியலிடப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!