முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று புதுப்பெண் திட்டத்தின் 2.0 தொடங்கி வைக்கிறார்

Mani
3 years ago
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று புதுப்பெண் திட்டத்தின் 2.0 தொடங்கி வைக்கிறார்

புதுமைப்பெண் திட்டம் கடந்த ஆண்டு சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் டெல்லியின் முதல்வர் அரவிந்து கெஜரால் இது திட்டத்தை தொடங்கி வைத்தனர். புதுமைப்பெண் திட்டம் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயன்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் முக்கிய அம்சம்.

புதுமைப்பெண் திட்டத்தின் நோக்கங்கள் உயர்கல்வி உறுதி செய்யவும் உயர் கல்வி கற்ற பெண்ணாகும் கல்வியறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவர்களாகவும் உருவாக்கிட. பெண்களுக்கு உயர் கல்வி அளித்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல் குழந்தை திருமணத்தை தடுத்தல் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு ,பொருளாதார ரீதியாக உதவுவதன் பெண் குழந்தைகளை இடை நின்று இடைநீற்றல் விகிதத்தை குறைத்தல் பெண் குழந்தை விருப்பத்தை தேர்வுகளின் படி அவர்களின் மேற்படிப்பு தொடர ஊக்குவிப்பு பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல் பெண் சமூகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது. 
 

திட்டத்தின் முதல் கட்டமாக  116342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர் இத்திட்டத்தின் மூலம் இடைநீற்றல் இருந்து 12000  மாணவிகள் மீண்டும் உயர்கல்வி சேர்ந்து பயன் அடைந்து வருகின்றனர்.  மேலும்  104347 மாணவிகள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்ட திட்டத்தை அறிவிக்க உள்ளார் தமிழக முதல்வர்,  இதில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன் ,நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர்கள், இயக்குனர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  திட்டம் இன்று திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற உள்ளது.

 

 

 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4