பிரபல நடிகைகளுடன் 'பதான்' படத்தை பார்த்து ரசித்த கமல்

Mani
1 year ago
பிரபல நடிகைகளுடன் 'பதான்' படத்தை பார்த்து ரசித்த கமல்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பதான்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. சமீப காலமாக பாலிவுட் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அந்த ட்ரெண்டை மாற்றிய படம் ‘பதான்’. ட்விட்டரில் #ban ஹேஷ்டேக் போட்டாலும் 'பதான்' படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படத்தில் தீபிகா படுகோனே, ஆபிரகாம் லிங்கன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ஹாலிவுட் தரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் வெளியான "பதன்" திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நான்கு வருட காத்திருப்புக்கு பிறகு ஷாருக்கானின் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கான் ரா ஏஜெண்டாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சல்மான் கான்.

கடந்த ஜனவரி 25ஆம் தேதி நாடு முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது 'பதான்' திரைப்படம். 'கேஜிஎஃப்' 'பாகுபலி' படங்களின் வசூலை முறியடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பாலிவுட் திரையுலகம் 'பதான்' படத்தின் மூலம் மீண்டு வந்துள்ளது.

இந்நிலையில் ‘பதான்’ படத்தை 80's நடிகைகளுடன் பார்த்து ரசிக்த்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அவருடன் அவருடைய அண்ணன் மகளும் நடிகையுமான சுஹாசினி, நடிகைகளான ஷோபனா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் ‘பதான்’ படத்தை பார்த்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!