சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mani
1 year ago
சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கியாரா அத்வானி. தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தற்போது தனது காதலரான பிரபல நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவுடன் கைகோர்த்துள்ளார்.

சித்தார்த்தும் கியாராவும் 2018 ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படத்தில் பணிபுரியும் போது சந்தித்தனர். அதன் பிறகு தமிழ் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷெர்ஷா படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும் சித்தார்த்தும் கியாராவும் அதில் பணிபுரியும் போது காதலர்களாக மாறினர்.

இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டாலும், அதுபற்றி இருவரும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் இவர்களது காதலை போல ரகசியமாக திருமண வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ராஜஸ்தானில் உள்ள ஜெய் சல்மான் அரண்மனையில் நேற்று திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், அவர்களது திருமண மண்டபத்திற்குள் பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் செல்போன், கேமரா போன்றவற்றை பயன்படுத்த   தடை என்று கூறப்பட்டது.திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், பிரபலங்கள் மட்டுமே அழைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், கியாரா மற்றும் சித்தார்த்தா திருமணம் மிகவும் முக்கியமானதாக மாறியது. இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த ஜோடியின் திருமண புகைப்படத்தில் கியாரா அத்வானி, "எங்கள் முன்னோக்கி செல்லும் பயணத்தில் உங்கள் அன்பையும்  ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம்"" என்று பதிவிட்டுள்ளார்.

சித்தார்த் மற்றும் கியாராவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, பலர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'ஆர்சி 15' படத்தில் நடித்து வருகிறார். ரோஹித் ஷெட்டி இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!