வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வவுனியா பொது வைத்தியசாலை மருத்துவர்கள்

#SriLanka #doctor #மருத்துவர்கள் #Protest #strike #Vavuniya #வவுனியா #sri lanka tamil news #Lanka4 #லங்கா4
Prasu
3 years ago
வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வவுனியா பொது வைத்தியசாலை மருத்துவர்கள்

நியாயமற்ற வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் இன்று (8) காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியாலய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெற்றோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தினத்துக்கு ஆதரவளித்து, 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன், அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 24 மணித்தியாலய பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப் பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில பிரிவுகளில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் சேவையில் ஈடுபடுவதுடன், வெளிநோயாளர் பிரிவு, க்ளினிக் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக க்ளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றுக்கு வருகை தந்த நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4