சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் -தெற்கு கரோலினா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை

Mani
1 year ago
சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் -தெற்கு கரோலினா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை

அமெரிக்க வான்பரப்பில் சீன பலூன் பறந்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. வானிலை ஆய்வு செய்வதற்காக பறந்து சென்றதாகவும், பலத்த காற்று வீசியதால் அமெரிக்க வான்வெளிக்குள் சென்றதாகவும் சீனா விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அருகே பறந்த பலூன் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

அதுமட்டுமின்றி, பலூனில் சென்சார்கள், கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப விஷயங்கள் இருந்தன. இது உளவு பலூனாக இருக்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. சுமார் 55,000 அடி உயரத்தில் பறந்த பலூன் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? என்று எல்லாம் விவாதிக்கப்பட்டது.

இரண்டாவது பலூன் காணப்பட்டது மற்றும் பதற்றம் அதிகரித்தது. இதனால் பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்கா முடிவு செய்தது. இது குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது வானிலையை கணிக்க அனுப்பப்பட்ட பலூன் என்றும் உளவு பார்க்க அல்ல என்றும் பலமுறை விளக்கமளித்தனர்.

ஆனால், அதை ஏற்காத அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அது கடலில் விழுந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் சீன தரப்பில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உடனடியாக கடற்படையை அனுப்பி பலூனை மீட்டது. பலூனுக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய அமெரிக்க அரசு ஆர்வமாக இருந்தது.

200 அடி உயரம் கொண்ட பலூன், அதுமட்டுமின்றி 11 கிலோ மீட்டர் சுற்றளவில் பலூனின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. இதில் ஒன்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கிரேன் பொருத்தப்பட்ட கப்பல் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் தென் கரோலினா கடலில் சீன பலூன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை அமெரிக்க கடற்படை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பலூனில் உளவு பார்க்கும் சாதனங்கள் இருப்பது சாத்தியமா? இல்லையா?என்பது பற்றி தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது

மேலும் நீருக்கு அடியில் பயணிக்கக் கூடிய ஆளில்லா இயந்திரத்தை அனுப்பி பலூனின் பாகங்களை சேகரித்துள்ளனர். இந்த பலூனை ஆய்வு செய்வதன் மூலம் வானில் இருந்த படியே கண்காணிக்கும் சீனாவின் தொழில்நுட்ப வசதிகள், அதன் வடிவமைப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று அமெரிக்கா தரப்பு கருதுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!