உலகின் சிறந்த மாணவி என சென்னையை சேர்ந்த சிறுமி நடாஷா சாதனை

Mani
3 years ago
உலகின் சிறந்த மாணவி என சென்னையை சேர்ந்த சிறுமி நடாஷா சாதனை

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹேப்கின்ஸ் இளைஞர் திறன் மையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புத்திசாலி மாணவர்களுக்கான போட்டி நடக்கும்.

இந்தப் போட்டியில் தான் படிக்கும் வகுப்பை விட ,உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையாக கற்பிக்கும் திறன், இதை வெளிப்படுத்தும் திறன் உள்ளவர்களுக்கு சிறந்த இடமாக விளங்கும்.
இதன்படி 2021 - 2022-ம் ஆண்டுக்கான போட்டியில் 76 நாடுகளை சேர்ந்த 15,300 மாணவ மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 

அதைப்போலவே உலகம் எங்கும் 76 நாடுகளை சேர்ந்த, 15, 300 பேர் பங்கேற்ற உலகில் மிகச்சிறந்த புத்திசாலி மாணவர்களுக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும் சென்னை மாணவி, நடாஷா பெரியநாயகம், 13 சிறப்பிடத்தைப் பிடித்த சாதனை படைத்துள்ளார் என குறிப்பிடத்தக்கதாகும்.

இதில், அமெரிக்காவின் நியூ  ஜெர்சி நகரில் ஆறாம் வகுப்பு படிக்கும் நடாஷா பெரியநாயகம் என்ற மாணவி, தன் வயது மற்றும் வகுப்பை சேர்ந்தவர்களை விட உயர்ந்த புத்திசாலியான மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு நடந்த போட்டியிலும், இவர் பங்கேற்று சிறப்பிடம் பெற்றது. நடாஷாவின் பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள்.

இந்த ஆண்டுக்கான போட்டியில், எட்டாம் வகுப்பில் படிக்கும் புத்திசாலி மாணவர்களின் புத்திக் கூர்மையில், 90% பெற்றுள்ளார் நடாஷா. இதில் 15,300 பேரில் இறுதிப் போட்டியில் இடம்பெற்றுள்ள நடாஷாவும் ஒருவர் என்ற பெருமையும் பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4