துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000ஐ தாண்டியுள்ளது

#Turkey #Syria #Earthquake #Lanka4 #world_news #Tamilnews
Prathees
3 years ago
துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000ஐ தாண்டியுள்ளது

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000ஐ தாண்டியுள்ளது.

துருக்கியில் 8,574 இறப்புகள் மற்றும் சிரியாவில் 2,662 இறப்புகள் உட்பட மொத்தம் 11,236 இறப்புகளை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த துல்லியமான புள்ளி விபரங்களைப் பெறுவது கடினமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீட்புக் குழுவினரால் சுமார் 6,000 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது.

இதேவேளை, நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளுக்கு துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் விஜயம் செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4